கனடிய பிரதமரின் வெற்றியினை தடுக்கும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளி தலைவர்

Jul 21, 2021 09:41 pm

அண்மையில் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் என் டி பி கட்சியின் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாக்மீட் சிங்க் கன்செர்வேட்டிவ் கட்சின் எரின் ஓடூலே அவர்களை விட அதிக ஆதரவை பெற்ற தலைவராக மாக்களால் தேர்வு செய்யப்பட்டுளளார். 

லெஜெர் மற்றும் அஸோஸியேஷன் போர் கனேடியன் ஸ்டடீஸ் நடத்திய கருத்து கணிப்பில் ஜஸ்டின் ரூடோ 25 விகித புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஜாக்மீட் சிங்க் 19 விகித புள்ளிகளுடனும் ஓ டூலே 13 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.


இந்த கருத்து கணிப்பில் வெளியான வேறுமொரு ஆச்சரியப்பட வைக்கும் விடயம் என்னவாயின், என் டி பி கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவானது 3 விகிதம் அதிகரித்து உள்ளது

 இதேவேளை 34 விகிதமானவர்கள் லிபரல் கட்சியையும் 29 விகிதம் கொன்வேர்டிவ் கட்சியையும் 22 விகிதம் பேர் என் டி பி கட்சியையும் ஆதரிக்கின்றார்கள்.

இதன் காரணமாக ஜஸ்டின் ரூடோவின் தனிப்பெரும்பான்மை வெற்றி வாய்ப்பு கேள்வியாகி உள்ளது.

என் டி பி கட்சி 20 விகித வாக்குகளை பெற்று 10 ஆசனங்களை பெறலாம் அல்லது 20 வகித வாக்குகளை பெற்று 30 இடங்களையும் பெறலாம் என்று இந்த ஆய்வை நடத்திய நிறுவனத்தின் போர்க் தெரிவித்தார்.

 இந்த சூழலில் ஜஸ்டின் ரூடோ பெரும் பான்மை பலத்துடன் வெற்றி பெற ஒரே வழி கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சனைகளை திறன்பட கையாளுவதே என்றும் ஆய்வாளர்கள் கருத்து கூறி உள்ளார்கள்.

 

Read next: ஒன்ராறியோ இன்று 135 தொற்றுகளையும் 4 மரணங்களையும் பதிவு செய்தது