இந்த ராசிகரர்களுக்கு பணம் கொட்டப்போகுது

Sep 06, 2022 05:00 am

மேஷம்; 

நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளிட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

அஸ்வினி : முன்னேற்றமான நாள்.

பரணி : அறிமுகம் கிடைக்கும்.

கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.

ரிஷபம்;

நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 

கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும். 

ரோகிணி : விவேகம் வேண்டும்.

மிருகசீரிஷம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

மிதுனம்;

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். சாதுர்யமான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டு சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.

திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும். 

புனர்பூசம் : மாற்றமான நாள்.

கடகம்;

எந்தவொரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வருவாயை மேம்படுத்துவதுவதற்கான சூழல் அமையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : ஆதரவு ஏற்படும்.

ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

சிம்மம்;

புத்திரர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவியின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

மகம் : சுபச்செலவுகள் ஏற்படும்.

பூரம் : மாற்றமான நாள். 

உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.

கன்னி; 

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.

அஸ்தம் : பிரச்சனைகள் குறையும். 

சித்திரை : ஆதரவான நாள்.

துலாம்; 

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். காப்பீட்டு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் தவறிப்போன சில ஒப்பந்தம் மீண்டும் சாதகமாக அமையும். முக்கியமான முடிவில் சிந்தித்து செயல்படவும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : புதுமையான நாள். 

சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விசாகம் : சிந்தித்து செயல்படவும். 

விருச்சிகம்;

தொழில் சார்ந்த புதிய முயற்சியில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். புதிய நபர்களால் தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். விருத்தி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

விசாகம் : மகிழ்ச்சியான நாள். 

அனுஷம் : முடிவு கிடைக்கும்.

கேட்டை : புரிதல் உண்டாகும். 

தனுசு;

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 

மூலம் : புரிதல் மேம்படும். 

பூராடம் : சோர்வான நாள். 

உத்திராடம் : கவனத்துடன் செயல்படவும்.

மகரம்;  

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவினை எடுப்பீர்கள். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும். 

திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.

அவிட்டம் : மாற்றம் ஏற்படும். 

கும்பம்; 

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வீட்டில் மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றத்தை செய்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 

அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.

சதயம் : மகிழ்ச்சி உண்டாகும். 

பூரட்டாதி : மாற்றமான நாள்.

மீனம்;

செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனை தொடர்பான கடன் உதவி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : மேன்மையான நாள்.

உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும். 

ரேவதி : பாராட்டுகளைப் பெறுவீர்கள்.


Read next: வடகொரியாவிடம் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா