மொகடிசுவில் தற்கொலை தாக்குதல் 8 பேர் பலி

Jul 10, 2021 12:30 pm

சோமாலிய தலைநகர்  மொகடிசுவில் இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

மொகடிசுவில் பரபரப்பான சந்தியொன்றிலேயே அரசாங்க தரப்பை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்புக்கூறாத நிலையில் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்குடன் இருக்கும் அல் ஷபாப் இதனை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த அரச பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எட்டு சடலங்களை சம்பவ இடத்தில் கண்டதாகவும் அதில் ஒன்று பெண் ஒருவருடையது என்றும் குண்டு வெடிப்பை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.Read next: பங்களாதேஷ் தீ விபத்து - தொழிற்சாலை உரிமையாளர் கைது