சுமார் 95 விகிதம் பேரை மொடர்னாவின் கோவிட் தடுப்பு மருந்து பாதுகாக்கும்-புதிய நம்பிக்கையூட்டும் செய்தி

2 weeks

இரண்டாவ தடுப்பு மருந்து தயாரிப்பாளரான மொடர்னா தனது தடுப்பு மருந்து 94.5 வீத செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையி;ல் அச்சுறுத்தலான கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பு செயற்பாடுகள் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றன.

மொடர்னாவின் இறுதிக்கட்ட பரிசோதனையில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பெறுபேறு கிடைக்கபெற்றுள்ளதுடன் இதன் பயன்பாட்டின் போது எவ்வித பாதுகாப்பு ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த மருந்து சிறப்பாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் பைஸர் மற்றும் பயோடெக்கின் தடுப்பு மருந்து 90 வீத செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவித்திருந்தது.

கனடா கொள்வனவு செய்ய உள்ள அனுமதி பெறுவதற்காக நிலுவையில் உள்ள நிறுவனங்களி; இந்த இரண்டு நிறுவனங்களும் அடங்குகின்றன.

ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ்கள் வீதம் வழங்கும் வகையில் மொடர்னா நிறுவனத்திடம் இருந்து 56 மில்லியன் மருந்துகளை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையில் கனடா கைச்சாத்திட்டுள்ளது.

மொடர்னாவின் ஆர் என்ஏ 1273 தடுப்பு மருந்தை 30 நாட்களுக்கு 2 பாகை செல்சியஸ் லிருந்து 8 பாகை செல்சியஸ் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்க முடியும்.இதனை அறைவெப்பத்தில் 12 மணித்தியாலங்கள் வரை வைத்திருக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பைஸர் தடுப்பு மருந்து கொண்டுவரப்பட்டு 70 பாகை செல்சியஸில் வைத்திருக்க வேண்டும்.இதனை ஐந்து நாட்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்க முடியும்.அல்லது 15 நாட்கள் வரை தேர்மல் ஷிப்பிங் பெட்டியில் வைத்திருக்க முடியும்.

பைஸர் தடுப்பு மருந்தின் பின்னர் மொடர்னாவின் அறிவிப்பு தொற்றை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை மேலும் பலப்படுத்துகின்றது.

இது ஒரு சிறந்த நாள் என்றும் எதிர்வரும் சில வாரங்களில் இதனை பயன்படுத்துவதற்கான  அங்கீகாரத்தை பெற திட்டமிடுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஆரம்ப கட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் கிடைக்கபெற்றுள்ளதால் கேள்விகள் தொடர்கின்றன.

இதற்காக முப்பதாயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் அரைவாசி பேருக்கு உண்மையான மருந்தும் மிகுதியானவர்களுக்கு போலியான மருந்தும் வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதில் முதல் 95 பேருக்கு கொவிட் 19 நோய் அறிகுறி அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து 94.5 வீத பேரை இந்த மருந்து பாதுகாத்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது.

11 பேருக்கு கடுமையான தாக்கம் இருந்தது.நோய் எதிர்ப்பு சக்தி ஏற்றப்பட்டவர்களுக்கு எதுவும் நிகழவில்லை.

உலகில் நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் மற்றும் எத்தனை வயதுடையவர் என்பதை பொறுத்து தடுப்பு மருந்தின் முன்னுரிமை காணப்பட போகின்றது.

அமெரிக்காவில் 20 மில்லியன் மருந்துகளை வைத்துக்கொள்ள நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

அடுத்த வருடம் ஒரு பில்லியன் டோஸ்களை உலக நாடுகளுக்கு வழங்கலாம் என்றும் நிறுவமன் அறிவித்துள்ளது.

Read next: இத்தாலி 27,354 புதிய கோவிட் தொற்றுகளையும், 506 இறப்புகளையும் அறிவித்துள்ளது