அஸ்ட்ராஜெனிகா மற்றும் பைசர் தடுப்பூசியை கலந்து போட்டுக்கொண்டால் நடக்கும் அதிசயம்

Oct 19, 2021 04:46 am

அஸ்ட்ராஜெனிகா மற்றும் பைசர் தடுப்பூசியை அடுத்தடுத்து போட்டுக்கொண்டால் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று சுவீடன் நாட்டில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு முடிவுகள், பிரபலமான ஐரோப்பிய பத்திரிகையான ‘லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 7 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர். 

2 டோஸ் போட்ட பிறகு, அவர்கள் 2½ மாதங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். 

இதில், 2 வெவ்வேறு தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தாக்கும் ஆபத்து 67 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரியவந்தது.

ஆனால், 2 தவணையும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி போட்டிருந்தால், நோய் அபாயம் 50 சதவீதம்தான் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது.


Read next: போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சீன ராணுவம் கடும் எச்சரிக்கை