அழகுராணி போட்டி பாலியல் சர்ச்சை வழக்கு இரகசியமாக இடம்பெறுகிறது

May 14, 2022 08:40 pm

சாட்சிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ருவண்டா அழகுராணி போட்டி அமைப்பாளர் மீதான வழக்கை கிகாலியில் உள்ள நீதிமன்றம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் விசாரித்து வருவதாக நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ருவண்டாவில் பிரின்ஸ் கிட் என பரவலாக அறியப்படும் டியுடோனே இஷிம்வே, போட்டியாளர்களிடம் பாலியல் பலாத்காரம், கோரிக்கை அல்லது பாலியல் சலுகைகளுக்கு கோரிக்கை விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

 வழக்கு விசாரணையை இரகசியமாக நடத்த வேண்டுமெ பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கோரியுள்ளார். 

எனினும் இஷிம்வே இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டுமென  கோரினார்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் உடனடியாக நீதிமன்ற அறையை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.

கடந்த வாரம், கலாச்சார அமைச்சு ருவண்டா அழகுராணி போட்டியை இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

Read next: சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம், ஆசிரியர் கைது