சுற்றுலா பயணிகளிடம் தவறாக நடப்பது தண்டனைக்குரிய குற்றம் - ராஜஸ்தான்

Sep 14, 2021 05:03 pm

ராஜஸ்தானில் சுற்றுலா பயணிகளிடம் தவறாக நடந்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் அது தொடர்ந்து நிகழும்பட்சத்தில் பிணையில் வெளிவர முடிடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கான திருத்தச்சட்டமூலம் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் 2010 ஆம் ஆண்டின் வசதிகள் மற்றும் ஒழுங்குகள் சட்டத்தில்  பிரிவு 27 ஏ இனுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சுற்றுலா திருத்தச்சட்டம் வாய்மொழி மூல வாக்களிப்பின் மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருடாந்தம் இலட்சக்கணக்கான உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரும் முக்கிய பகுதியாக ராஜஸ்தான் உள்ளது.

ஆனாலும் சுற்றுலா பயணிகள் சட்டவிரோத விற்பனையாளர்கள் மற்றும் விரும்பத்தகாத நடத்தைகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

பிரிவு 13 இன் படி எவரேனும் இவ்வாறு குற்றமிழைத்தால் பிடியாணையின்றி கைது செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதுடன் இந்திய நாணயப்படி 30000 அபராதம் விதிக்கப்படும்.

இதேவேளை ஒரு தடவைக்கு மேல் தண்டிக்கப்பட்டு மீண்டும் குற்றமிழைத்திருந்தால் அவரை பிடியாணையின்றி கைது செய்ய முடியும் என்பதுடன் 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஒரு இலட்சம் இந்திய ரூபாய் வரை அபாராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read next: பசுக்களுக்கு சிறுநீர் கழிக்கும் பயிற்சி