அமைச்சர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப ஆலோசகர்களை நியமிக்க முடியாதுb

3 weeks

அமைச்சர்கள் இனிமேல், தமது விருப்பத்துக்கு ஏற்றவகையில் ஆலோசகர்களை நியமிக்க முடியாதெனத்  அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்மன்பிலதெரிவித்தார்.

 அமைச்சின் ஆலோசகர்களை நியமிப்பதற்காக, ஜனாதிபதியால் 3 நெறிமுறைகள் முன்வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

 குறித்த ஆலோசகர், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பவராகவும் அரசாங்கத் திணைக்களமொன்றின் பிரதான அல்லது உயரிய பதவி வகித்தவராக அல்லது வகிப்பராகவும் இருக்க வேண்டுமென்றார். 

அத்துடன்இ தனியார் நிறுவனமொன்றின் உயர் அதிகாரியாக இருந்தவர்களையும், தமது ஆலோசகர்களாக அமைச்சர்கள் நியமிக்க முடியும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளாரெனவும்இ இணைப் பேச்சாளர் தெரிவித்தார்.


Read next: கண்டி சம்பவம்: வீட்டின் உரிமையாளருக்கு விளக்கமறியல்