வதிவிட உரிமைக் கோரி பெல்ஜியத்தில் உண்ணாவிரதம்

Jul 21, 2021 12:52 pm

பெல்ஜிய தலைநகரில் வதிவிட உரிமையைக் கோரி கடந்த இரண்டு மாதங்களாக ஆவணங்களற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர்; உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர் அருந்துவதற்கு கூட மறுக்கும் இவர்கள் உயிராபத்தை நெருங்குகின்றனர்.இது பெல்ஜிய அரசாங்கத்தினை இக்கட்டில் தள்ளும் வகையில் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

400 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளதுடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் பல வருடங்களாக பெல்ஜியத்தில் வாழ்கின்றவர்கள்.

இந்த போராட்டம் தொடர்ந்தால் இவர்கள் இன்னும் சில நாட்களில் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக மருத்துவ உதவி நிலையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலானவர்கள் தன்னம்பிக்கையை இழந்து தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் உள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

உண்ணாவிரதம் இருப்பவர்களுக்காக நடைமுறையில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான குடிவரவு விதிமுறைகளை மாற்றுவதற்கு பிரதமர் அலெக்ஸாண்டர் டி க்ரூஸ் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களில் எவரேனும் ஒருவர் இறந்தாலும் கூட்டணியிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள 7 கூட்டணிகளில் இரண்டு கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டகாரர்களில் பெரும்பாலானவர்கள் தெற்காசியா,வட ஆபிரிக்கா மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலம் பெல்ஜியத்தில் வசிப்பவர்களும் ஆவர்.

கொரோனா முடக்க காலத்தில் பணிபுரிந்த கெபேக்கள்,உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.தமக்கான உரிய ஆவணங்கள் இன்மையினால் நலன்புரிய விடயங்களை பெறுவதிலும் பெரும் சிரமங்களை இவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

நாட்டில் ஆவணங்களின்றி 150000 பேர் உள்ளதாகவும் 400 பேருக்காக அதில் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.Read next: பிரபல இ-மெயில் தளமான ‘மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்ச் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்