உலகை ஆழப்போகும் ChatGPT - பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் Microsoft

Jan 24, 2023 03:34 am

ChatGPT என்ற தொழில்நுட்பத்திற்காக பல பில்லியன் டொலர்களை Microsoft முதலீடு செய்துள்ளது.

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை உருவாக்கிய OpenAI நிறுவனத்துடனான பங்காளித்துவத்தை நீட்டிப்பதாக Microsoft தெரிவித்துள்ளது.

OpenAI நிறுவனத்தில் பல பில்லியன் டொலரை முதலீடு செய்யப்போவதாக Microsoft நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடல்லா (Satya Nadella) கூறினார்.

ChatGPT கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அதைக் கொண்டு கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை ஒரு சில வினாடிகளில் எழுதலாம்.

அதனால் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மோசடிச் செய்ய அது வழிவகுக்கக்கூடும் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் சில மாநிலங்களில் பல்கலைக்கழகங்களிலும் பள்ளிகளிலும் ChatGPT தடை செய்யப்பட்டுள்ளது.

Microsoft OpenAI நிறுவனத்தில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக சில ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.Read next: கெட்ட கனவுககளை தவிர்ப்பதற்கான நான்கு வழிமுறைகள்