எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்-மனமுருகி வேண்டும் அங்கெலா மேர்க்கெல்

Sep 07, 2021 09:52 pm

இன்று செய்வாய் அங்கேலா மேர்க்கெல் அவர்கள் பேசுகையில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறும் தனக்கு பின்னர் தனது கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் அர்மின் லஸ்செட் அவர்களுக்கு இந்த மாத தேர்தலில் வாக்களிக்குமாறு மனமுருகி ஜேர்மன் வாக்காளர்களை வேண்டினார்.

அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அங்கேலா மேர்க்கெல் அவர்களின் கட்சி பின்தங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. போர்சா என்ற நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் சோசியல் டெமோகிராட்ஸ் 25 விகித புள்ளிகளையும் மேற்கொள் அவர்களின் கட்சி 19 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

கடந்த 16 வருடனமாக மேர்க்கெல் அவர்களின் கிறிஸ்டின் டெமோகிராடிக் கட்சி ஆட்சியை நடத்திவந்துள்ளது. இருப்பினும் கடந்த மாதம் எவரும் எதிர்பாக்காதவகையில் சோசியல் டெமோகிராட்ஸ் முன்னிலைக்கு வந்துள்ளார்கள்.

தமது முன்னிலையை இழந்த கிறிஸ்டின் டெமோகிராடிக் கட்சி பல்வேறு வழிகளில் முள்ளிலைக்கு வருவதற்கு முயட்சி செய்து வருகின்றது-இதன் ஒருபகுதியாகவே மேர்க்கெல் அவர்கள் வாக்காளர்களை மனம் உருகி வேண்டி தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு வேண்டி உள்ளார்.

Read next: ஆப்கானின் அவலநிலையை கூற வந்த அமெரிக்க அரசியல் அவதானியை தடுத்து நிறுத்திய பி.பி.ஸி தொகுப்பாளர்