சட்ட மன்ற தேர்தல் வாக்கெண்ணும் நடைமுறைகள் தொடர்பில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார்.

1 week

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், அமைச்சர் பென்ஞமின் அவதூறு பேச்சு மற்றும் ஆவடி சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்கு எண்ணும் மையம் அமைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் மற்றும் பச்சைப்பன், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் நீலகண்டன் ;சட்டமன்றப் பொதுத்தேர்தலில்  அமைதியாக நடத்துவதற்கு திமுக சார்பில் ஒத்துழைப்பு கொடுத்தோம். அதிமுகவினர் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதை தலைமை தேர்தல் அலுவலரிடம் இன்றைக்கு எடுத்துக் கூறியாத அவர் தெரிவித்தார் .நேற்று வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே அதிமுக அமைச்சர் பெஞ்சமின் திமுகவை சார்ந்த அப்பகுதியில் உள்ள இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களையும் திமுக செயல் வீரர்களையும் கொச்சையான வார்த்தைகளில் பேசியிருக்கிறார் மாதிரி நன்னடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார். அவர்  வாக்களார்களை  அச்சுறுத்தி இருக்கிறார் மாதிரி நன்னடத்தை விதிமுறைகளை மீறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி யிடம் புகார் மனு அளித்துள்ளோம்.தமிழக சட்டமன்ற தேர்தல்  முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு இருக்க வேண்டும், வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்திருக்கிறது ,இது குறித்து முழுமையாக விசாரித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சில இடங்களில் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்ட பிறகு அந்த சீலை அகற்றப்பட்டு இருக்கிறது .இது போல சில இடங்களில் நடந்த முறைகேடுகள் குறித்தும் அந்த தேர்தல் அலுவலரிடம் இருந்து உரிய அறிக்கையில் தரவேண்டும் என்று  கோரிக்கை விடுத்தோம் வாக்குஎண்ணும் மையத்திலுள்ள டார்க் ரூம் எனப்படும் அறைகளில் முழுமையாக பாதுகாப்பு அளிக்க வேண்டும், மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எந்தவிதமான தவறுகளும் நடக்க அனுமதிக்காமல் முழுமையாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் திமுக சார்பில் கேட்டுக் கொண்டாத அவர் தெரிவித்தார்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உடைய பிரதிநிதிகளை முழுமையாக கண்காணிக்க அனுமதிக்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அதனை பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து விதமான கோரிக்கைகளையும் கேட்டிருக்கிறோம் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு சத்யபிரதா சாகு அவர்கள் எந்த விதத்திலும் வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு குறைபாடு இருக்காது என்றும்,வாக்கு எண்ணிக்கை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவோம் என வாக்குறுதி அளித்தாக அவர் தெரிவித்தார்.

Read next: யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை .