யாழ். பல்கலை மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு!!

Sep 12, 2021 05:32 am

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாம் ஆண்டு மாணவியே நேற்று (11) மாலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவராவார்.

மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


Read next: இலங்கையில் நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்?