காணாமல் போயுள்ள 197 பேரை மீட்க மாபெரும் மீட்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டடுள்ள இந்திய அரசு

Feb 09, 2021 11:59 pm

மிகப்பெரிய பனிப்பாறை உத்தரகண்ட் மாநிலத்தில் உடைந்து உருகியதால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து மாபெரும் மீட்பு நடவடிக்கையை இந்திய அரசு செய்வாய்க்கிழமை முடக்கி விட்டுள்ளது. பனிப்பாறை உடைந்து உருகியதால் வெள்ளம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் மேலும் 197 பேரை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்திய ராணுவ அணி மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து இடைவிடாது மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இதுவரை 31 உடல்களை மீட்டுள்ளனர், அதே வேளை 1.9 கிலோமீட்டர் நீளமாக உள்ள சுரங்கப்பாதைக்குள் குறைந்தது 35 பேர் வரை சிக்குண்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதால் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துளளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Read next: கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து வெளிவந்துள்ள புதிய தகவல்! தப்பித்தது சீனா!