தென்னாபிரிக்காவில் ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின் மிக மோசமான வன்முறை சம்பவங்கள் பதிவு!

Jul 14, 2021 06:08 am

நேற்று தென்னாப்பிரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் பொதுமக்கள் பொலிஸாருடன் மோதியதுடன், பல இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊழல் விசாரணையில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதற்காக கடந்த வாரம் ஜுமா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

வன்முறை மற்றும் கொள்ளைகளைத் தடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக நேற்று மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கடந்த சில நாட்களில் 1,234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தென்னாப்பிரிக்க பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.

ஜொகானஸ்பேர்க் மற்றும் டெங் மாகாணங்களிலும் இடம்பெறும் குற்றங்களைத் தடுக்கும் முயற்சியில் ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read next: கொழும்பு நோக்கிப் பயணித்த அரச பேரூந்து திருப்பி அனுப்பி வைப்பு!