வருமானம் இதில்தான் அதிகம் ஓப்பனாக கூறிய மணிமேகலை

Jan 18, 2023 10:38 am

மணிமேகலை கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே அதாவது 2009ம் ஆண்டு வீடியோ ஜாக்கியாக பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக 2011 முதல் 2017 வரை பணியாற்றி இருக்கிறார்.

பின் ஹுசைன் என்ற நடன கலைஞரை பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் காதலித்து 2017ம் ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டார்.

அதன்பிறகு விஜய் டிவி பக்கம் வந்த மணிமேகலை பங்குபெறாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் கூற வேண்டும்.

தொலைக்காட்சியில் வருவதை தாண்டி பட்டிமன்றம், தனியார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, யூடியூப் பக்கம் என படு பிஸியாக ஆனார்.

சொகுசு கார், பைக், வீட்டு மனை, அதில் புதிய வீடு கட்டுவது என மணிமேகலையின் வாழ்க்கை வளர்ச்சி அடைந்தது.

அவரது சொத்து மதிப்பு கூட ரூ. 7.82 கோடி முதல் ரூ. 35 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

அண்மையில் ஒரு பேட்டியில் அவரிடம் அதிக வருமானம் வருவது விஜய் டிவியிலா அல்லது யூடியூப் மூலமா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் யூடியூப் மூலம் தான் அதிக வருமானம் என்று கூறி இருக்கிறார்

Read next: அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஹிட்லருடன் ஒப்பிடும் ரஷ்ய அமைச்சர்!