கனடாவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண் - முன்னாள் கணவருக்கு எதிராக விசாரணை

Nov 21, 2022 07:13 am

கனடாவில் தமிழ் பெண் ஒருவர் கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் முன்னாள் கணவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு ஒன்றாரியோ உயர் நீதிமன்றில் (16ம் திகதி) ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.  

2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி தர்சிகா ஜெகநாதன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். 


இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் முன்னாள் கணவர் சசிகரன் தனபாலசிங்கத்திற்கு எதிராக முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த  தர்சிகா ஜெகநாதன் கொலை செய்யப்பட்டிருந்தார். 

சசிகரன், தர்சிகா ஜெகநாதனின் மரணத்திற்கு காரணமானவர் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது, என்று அரச சட்டத்தரணி கௌலன் மூர் நீதியரசர் முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த புதன் கிழமை இடம்பெற்ற முதல் நாள் விசாரணையில் தர்சிகாவின் நண்பி காஞசனா பரமேஸ்வரன் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர் சாட்சியம் அளித்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read next: அவுஸ்திரேலியாவில் தவறாக நடந்த அறிவியல் சோதனை - பல மாணவர்கள் படுகாயம்