பிரித்தானியாவில் சொர்க்கத்துக்கு தகவல் அனுப்பலாம் - குவியும் கடிதங்கள்

Jan 25, 2023 12:19 am

பிரித்தானியாவில் காலமான அன்புக்குரியவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்ப ஓர் அஞ்சல் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் அது சாத்தியமில்லை என்ற போதிலும் இந்த அஞ்சல் பெட்டிக்கு 2,000க்கும் அதிகமான கடிதங்கள் குவிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் Warrington பகுதியின் Walton Hallஇல் 2021ஆம் ஆண்டு அந்த அஞ்சல் பெட்டி அமைக்கப்பட்ட போதிலும் தற்போதே வெற்றியளித்துள்ளது.

அந்தக் கடிதங்கள் wildflower என்ற பூவின் விதைகொண்டு செய்யப்பட்ட தாளில் எழுதப்படுகின்றன.

அவை எளிதில் மக்கும் தன்மையுள்ளவை என குறிப்பிடப்படுகின்றது.

மக்கள் கடிதங்களை எழுதி முடித்த பின்னர் அவை பூங்காவில் நட்டு வைக்கப்படுகின்றன.

மாண்டுபோன தங்கள் அன்புக்குரியவர்களை மக்கள் நினைவுகூரும் இடமாக அது அமைக்கப்பட்டுள்ளது.

Read next: மஹிந்தவின் காலம் முடிந்துவிட்டது - கைவிட்ட பிரபலங்கள்