சோபர் தீவில் பதுங்கியுள்ள மகிந்த ராஜபக்ச

May 11, 2022 03:30 am

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் தங்கியுள்ளதாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மேலும் தெரிவித்துள்ளதாவது,

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் மகிந்தவின் குடும்பத்தினர் தங்கியுள்ள நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார்.

நைஜீரியாவில் இருந்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது தந்தைக்கு நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

தனது தந்தை பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read next: ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கை!