ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

Jan 24, 2023 05:32 am

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கிளாமடம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட  அஷ்டபந்தன அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக மூன்று நாட்கள் நான்கு கால கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தொடங்கப்பட்டு பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகூதி ஆராதனை நடைபெற்றது

  அதனை தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேலியில் தீப ஆராதனை நிகழ்ச்சியோடு  கடம் புறப்பாடுடன் ,

விமானத்தில் சென்று  வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றும் நிகழ்வினை நூற்றுக்கணக்கான பக்த கோடிகள் கண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமத்து இளைஞர்கள், ஊர் பொதுமக்கள்,ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது

Read next: திமுக வழங்கிய ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு பானை வாங்க மட்டுமே பயன்படும் பொங்கல் கொண்டாட முடியாது