காந்தக் குரலாலும் வசீகர முகபாவத்தாலும் நம்மை ஈர்க்கும் எம் ஊர் பாடகன்!!

Aug 08, 2021 12:14 pm

ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது நம்மூர் இளைஞர்கள் மீளுருவாக்கியுள்ள பாடல். 

காதல் வேதம் எனும் ஆல்பத்தில் கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் ஹரிஹரனின் மற்றும் சுஜாத்தாவின் காந்தக்குரலில் 1998 ஆம் ஆண்டு வெளியாகி அனைவரது மனதையும் வெகுவாக ஈர்த்த மலையும் நதியும் எனும் பாடலினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த துவரகன் பாடி பலரது மனதையும் கவர்ந்துள்ளார். 

ரசிக்கும் படியாக  மீளுருவாக்கியுள்ள இசை, வானத்தோடு கூடிய அமைதியான பின்னணியைக் கொண்ட காணொளியில் துவரகனின் குரல் வளமும் முகபாவமும் அந்த பாடலின் காதல் உணர்வுக்குள் எம்மை மூழ்கடித்துவிடுகின்றது. 

எம்மூர்  இளைஞர்களுக்குள்ளும் இப்படி ஒரு திறமையா என வியக்க வைக்கிறது.  இதுபோல இலைமறை காயாக இருக்கும் எமது கலைஞர்களை நாம்தான் கொண்டாட வேண்டும்.  அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

Read next: இலங்கையில் மர்ம மனிதர்களின் அட்டகாசம்! தனிமையிலிருக்கும் பெண்களுக்கு ஆபத்து