எஸ்ஜே சூர்யாவின் 53வது பிறந்தநாள்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

Jul 20, 2021 08:42 pm

நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக உள்ளவர் எஸ்ஜே சூர்யா. வாலி, குஷி போன்ற படங்களின்மூலம் கோலிவுட்டில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து, நியூ, அன்பே ஆரூயிரே போன்ற படங்களின்மூலம் ஹீரோவாகவும் தன்னை வெளிப்படுத்தினார்.

முன்னதாக பாக்யராஜ், வசந்த் போன்றவர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ள இவர், அஜித்திடம் வாலி படத்தின் கதையை சொல்லி அவரை இயக்கும் வாய்ப்பை பெறுள்ளார். அந்த படம் எஸ்ஜே சூர்யாவிற்கு மட்டுமின்றி அஜித்தின் சினிமா கேரியரிலும் முக்கியமான படமாக அமைந்தது.

தற்போது, மான்ஸ்டர், இறைவி போன்ற படங்களின்மூலம் தன்னை ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது தனது 53வது பிறந்தநாளை அவர் கொண்டாடி வருகிறார்.

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தன்னை செதுக்கி சிறந்த நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா என்று அவர் பாராட்டியுள்ளார்.

Read next: பிரித்வி ஷா காதலி போட்ட ஹார்ட்டீன் இன்ஸ்டா பதிவு... ரசிகர்கள் குஷி!