வேல்ஸ் - சுதந்திரமாக சுற்றித்திரியும் பிராணிகளை ஆபத்தில் தள்ளிவிட வேண்டாம்.

Sep 14, 2021 11:34 am

வேல்ஸின் க்ரேட் ஓர்ம் உச்சிப்பகுதிகளில் திரியும் ஆடுகளுடன் செல்பி எடுப்பது குறித்து கரையோர பாதுகாப்பு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் தம்மை தாமே அபாயத்தில் தள்ளிக்கொள்ளும் வகையில் இவ்வாறு செயற்படுவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

முடக்கத்தின் போது அவை சுதந்திரமாக சுற்றித்திரியும் காட்சி உலக மக்களை ஈர்த்துள்ளது.ஆனால் அவை தற்போது மக்கள் நடமாட்ட அச்சத்தினால் கற்பாறைகளை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஆடுகள் பாதுகாப்பாக உள்ளதென்றும் மக்கள் தூரமாக இருக்க வேண்டும் என கரையோர பாதுகாப்பு பிரிவினர் கேட்டுள்ளனர்.

தரைப்பகுதிகளில் சுற்றித்திரியும் சுமார் 120 ஆடுகள் ஓர்ம் பகுதியின் கடல் பகுதியை அண்மித்துள்ளதாகவும் இது ஆபத்தான விடயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயந்து கடற்பகுதிகளில் உள்ள பாறைகளுக்கு சென்று அங்கு சிக்கிக்கொள்ளும் அல்லது உயிரிழக்கும் அபாயம் உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read next: மன்னார் பிரதேச சபை தவிசாளர் அதிகார வரம்பை மீறி செயற்பட்டமையால் பதவி நீக்கம் -விசேட வர்த்தமானி வெளியீடு!