பிரித்தானியாவின் அடுத்த பிரதாமரான லிஸ் ட்ரஸ்

Sep 05, 2022 12:56 pm

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக லிஸ் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கிற்கு எதிராக போட்டியிட்டவர் 81,326 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாளை அவர் தனது அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பிற்காக பால்மோரலில் உள்ள ராணியை சந்திக்கும் போது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 200,000 உறுப்பினர்களிடையே லிஸ் டிரஸுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன.

பிரதமர் போரிஸ் ஜொன்சனுக்கு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி எட்டு வாரம் நடைபெற்றது. 

ட்ரஸ் பதவியேற்றதும் முதல் வேலையாக எரிசக்தி விலையைக் கவனிக்கப்போவதாகச் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் மின்சார, எரிவாயு விலை எண்பது சதவீதம் அதிகரித்துள்ளது. குளிர்காலம் நெருங்குவதால் அது ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. 

யார் இந்த லிஸ் ட்ரஸ் ?

47 வயதாகும் அவர் முதலில் Liberal Democrats கட்சியில்  சேர்ந்தார்.

பின்னர் வலசாரி கன்சர்வெட்டிவ் கட்சிக்கு மாறினார்.

  • அரசியல், தத்துவம், பொருளியல் படித்தவர்.
  • 2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.
  • 2012ஆம் ஆண்டிலிருந்து அமைச்சர் பதவிகளில் இருந்திருக்கிறார்.
  • தற்போது பிரிட்டனின் வெளியுறவு அமைச்சராக இருக்கிறார்.
  • 2016ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக்கூடாது என்று பிரசாரம் செய்தார்.
  • ஆனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர் அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினார்.
  • அவரின் ஆடைகள், படங்கள் ஆகியவற்றால் அவர் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருடன்(Margaret Thatcher) ஒப்பிடப்படுகிறார்.

Read next: வெறிபிடித்த அரசியல்வாதிகள் - சந்திரிக்கா குற்றச்சாட்டு