வாழ்க்கை ஒரு முடிவில்லாத பயணம்

May 05, 2022 01:09 am

வாழ்க்கை ஒரு

முடிவில்லாத பயணம்

ஒரு பாதை முடிந்தால்

இன்னொரு பாதை துவக்கம்

ஒரு கதவை திறந்தால்

அடுத்தகதவு மூடியிருக்கும்

ஒரு சிகரத்தில் ஏறினால்

இன்னொரு பெரிய சிகரம் காத்திருக்கும்

வாழ்க்கை ஒரு

முடிவில்லாத பயணம்

மனதில் இறை நிலை உடையவர்கள்

அஞ்சாமல் தொடர்ந்து போவார்கள்

எதிர்படும் இடர்களை எல்லாம்

தகர்த்து முன்னேறுவார்கள்

கடவுளை நோக்கிய பயணம்முடிவில்லாத தொடர் பயணம்

ஆனால் உறுதியோடு பயணம் தொடர்ந்தால்

கடவுள் நம்கூடவே பயணித்து

தன்னை அடைய வைத்து விடுவார் 

Read next: கனடாவில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு - இரு தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது