பெரும் தொகையான இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கவில்லை : இந்திய அதிகாரிகள்

Sep 29, 2020 04:07 pm

இந்தியாவின் சனத்தொகையில் பெருமளவானவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தவில்லை என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.

ஆகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது மருத்துவ ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் வயதுவந்தவர்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் குறித்த ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

29000 அதிகமான வயதுவந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரிகளின் பிரகாரம் இதன் எண்ணிக்கை 7.1 வீதமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்

ஆகஸ்ட் 17 ம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் 22 ம் திகதி வரையான காலப்பகுதியில் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி பேரவையின் பணிப்பாளர் நாயகம் நடாத்திய ஊடக சந்திப்பில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்பை எதிர்கொண்டுவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளபோதிலும் இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: பிரித்தானிய அரசின் தரவுகளில் இன்று முதல் முறையாக மிக அதிகமான கொரோனா தொற்று பதிவாகியது