மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா காலமானார்

3 weeks

குவைத்தில் Emir என்றழைக்கப்படும் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா (Sheikh Sabah Al-Ahmad Al-Sabah)  தனது 91ஆவது வயதில் காலமானார்.

ஷேக் சபா 2006ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருந்துவந்தார்.

50ஆண்டுக்கும் மேலாக குவைத்தின் வெளியுறவுக் கொள்கையைத் திறம்பட வகுத்தவர் என்ற சிறப்பு அவருக்குண்டு.

1990ஆம் ஆண்டு ஈரான் படையெடுப்புக்குப் பிறகு, நாட்டின் மீட்சிக்கு ஷேக் சபா முக்கியப் பங்காற்றினார்.

கடந்த ஜூலை மாதத்திலிருந்தே அமெரிக்க மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.

இன்று மாலை அவரது உடல் அமெரிக்காவிலிருந்து குவைத் சென்று சேரும். 

மினசோட்டா மருத்துவமனையில் ஜூலை முதல் சிகிச்சை பெற்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை காலமானார்.

அரச நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இறுதிச் சடங்குகள் “அமீரின் உறவினர்களுக்கு மட்டுமே” அனுமதிக்கப்படும்.

இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பெரும் கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read next: விவாதத்தில் திடீரென இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா மீது பாய்ந்த டிரம்ப்!