லண்டனில் இருந்து அண்ணாத்த நாயகி... குஷ்பூவின் வேற லெவல் புகைப்படங்கள்!

Oct 18, 2021 09:05 pm

லண்டன் : நடிகை குஷ்பூ சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய கேரியரில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியுடன் தான் இணைந்துள்ள படத்தின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

படத்தின் மூன்றாவது சிங்கிள் மருதாணி வெளியாகவுள்ளது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில் திருவிழா கொண்டாட்டமாக காணப்படுகிறது. அதில் ரஜினியுடன் மீனா மற்றும் குஷ்பூ இணைந்து ஆட்டம் போட்டுள்ளனர்.

https://twitter.com/khushsundar/status/1449737814938202113

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது லண்டனில் ஹாலிடே கொண்டாட்டத்தில் உள்ளார். சமீபத்தில் சிஎஸ்கே வெற்றி குறித்து லண்டனில் இருந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.

இன்னிலையில் தற்போது லண்டனில் இருந்து வித்தியாசமான பின்புலத்தில் தனது செல்ஃபி புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கண்ணாடியுடன் மாடர்ன் காஸ்ட்யூமில் இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை அள்ளுகிறது.

https://twitter.com/khushsundar/status/1449731791510777864

தன்னை தற்போதுவரை மிகவும் அழகாக வைத்துக் கொண்டுள்ள குஷ்பூ, இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் உள்ளார். தற்போது உடலையும் ஓரளவிற்கு குறைந்து மிகவும் அழகாக காட்சியளிக்கிறார். வளர்ந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக உள்ள நிலையிலும் தன்னுடைய உடலை சிறப்பாக வைத்துக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய கணவருடன் இணைந்து தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இவர்களது தயாரிப்பில் தற்போது அரண்மனை 3 படம் ரிலீசாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

Read next: நான்காண்டு கொண்டாட்டத்தில் மெர்சல் படம்... ரசிகர்கள் உற்சாகம்