ஹெய்ட்டி ஜனாதிபதி கொலை - பிரதான சந்தேகநபர் கைது

Jul 12, 2021 11:35 am

ஹெய்ட்டி ஜனாதிபதியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ஜொவனல் மொய்ஸின் கொலையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் வைத்தியரான  பிரதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

63 வயதான கிறிஸ்டியன் இம்மானுவேல் சனூன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர் ஹெய்ட்டியின் பிரஜை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட விமானத்தின் மூலம் பிரதான சந்தேகசபர் ஹெய்ட்டிக்குள் நுழைந்துள்ளதாகபொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெய்ட்டியின் ஜனாதிபதி கடந்தவாரம் படுகொலை செய்யப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

குறித்தகொலைச் சம்பவம் வெளிநாடுகளின் ஆயுததாரிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்திருந்ததுடன் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை ஹெய்ட்டியின் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதியின் கொலை தொடர்பான விடயங்களை ஹெய்ட்டிக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்டபிரதிநிதிகள் குழு ஆராய்ந்துவருகின்றது.

அமெரிக்கத் துருப்பினர்களை நாட்டுக்கு அனுப்புமாறு ஏற்கனவே அமெரிக்காவிடம் ஹெய்ட்டி அரசாங்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Read next: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறும் : மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா