கன்னிகா நான் நெனச்ச மாதிரி இல்ல

Sep 01, 2022 12:54 pm

திருமணத்திற்கு பிறகு கன்னிகா பற்றி தான் நினைத்தது தவறு என்று சினேகன் கூறியுள்ளார்.

குறையாத காதலோடு சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.


பாடல் ஆசிரியரான சினேகனும் நடிகையான கன்னிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதல் ரசிகர்கள் பலருக்கும் ஆரம்பத்தில் அதிர்ச்சியை கொடுத்திருந்தது காரணம், இவர்களுடைய வயது வித்தியாசம் என்று பலர் கூறி வந்தனர்.

ஆனால் ஆரம்ப முதலே இவர்களுடைய தீவிர ரசிகர்கள் இவர்களை வாழ்த்தி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் சினிமா துறையில் இருப்பவர்கள் பலர் ஒரு சில வருடங்களிலே திருமணத்திற்கு பிறகு பிரிந்துவிடும் நிலையில், எட்டு வருடங்களாக காதலித்து அதே காதலோடு தற்போது வரைக்கும் வாழ்ந்து வரும் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர் ரசிகர்களின் மத்தியில் நன் மதிப்பை பெற்றுள்ளனர்.


சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் பிசியாக இருந்தாலும் வாழ்க்கை என்று வரும் போது இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களுடைய காதலை குறையாமல் வைத்துக் கொண்டு வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா அடிக்கடி தன்னுடைய காதல் கணவரான சினேகன் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக போஸ்ட் வெளியிட்டு வருவார்.


அந்த வகையில் திருமணத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தை அதிகமாக பயன்படுத்தாத சினேகன் தற்போது தனது காதல் மனைவியின் ஆசைக்காக பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சினேகன் ஆரம்பத்தில் கன்னிகா சாதாரணமாக அனைத்து பெண்களும் இருப்பது போல தான் திருமணத்திற்கு பிறகும் இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு கன்னிகாவை பார்த்து பல நேரங்களில் பெருமை பட்டிருக்கிறாராம். அதற்கு காரணம் தன்னுடைய அம்மாவை போலவே குடும்பத்தை வழி நடத்தி சென்று கொண்டிருப்பது என்று கூறி இருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் பிற பெண்களைப் போல தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று ஒருபோதும் அவர் சிநேகனை கஷ்டப்படுத்தியதே கிடையாதாம்.


திருமணத்திற்குப் பிறகு கன்னிகா அதிகமாக செலவு செய்வதை குறைத்துக் கொண்டாராம். அதனால் சினேகனாக இதை வாங்கிக் கொள் என்று சொன்னால் கூட அதைப்பற்றி அதிகமாக யோசித்து கொண்டிருப்பாராம்.

இதை பார்க்கும் போது தான் கன்னிகாவை பற்றி நினைத்தது தவறு என்று கூறி இருக்கிறார். சினேகனை விடவும் சினேகன் உடைய உறவினர்களிடம் அதிகமாக கன்னிகா பாசமாகவும் குடும்பத்தை ஒற்றுமையாகவும் வைத்திருக்கிறாராம்.

அதனால் தான் கன்னிகாவை தப்பாக குறைவாக மதிப்பிட்டு விட்டேன் என்று சினேகன் கூறியிருக்கிறார். இதை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் பலர் இதே போல நீங்கள் பல நாட்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Read next: இலங்கையில் சிகரெட் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!