ஜோர்டானில் ஆட்சி கவிழ்ப்பு முயட்சி? இளவரசர் வீட்டுக்காவலில்

1 week

ஜோர்டான் நாட்டு  இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் அரசர் அப்துல்லா அவர்களின் மாற்றான் தாய் மகன் ஹம்சா பின் ஹுசைன் அவர்கள் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அந்த நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பையும் ஸ்திரதன்மையையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது

நாட்டின் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய அறிக்கையில் இளவரசர் ஹம்சாவுக்கு விடப்பட்ட எச்சரிக்கையானது ஒரு பரந்த பாதுகாப்பு விசாரணையின் ஒரு பகுதி என்றும் இந்த விசாரணையானது ஒரு முன்னாள் அமைச்சர், அரச குடும்பத்தின் இளைய உறுப்பினர் மற்றும் பலர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டது தொடர்பான ஒன்றாகும் என்று தெரிவித்திருந்தது

இதேவேளையில் ஹம்சா ஒரு காணொளி மூலம் தெரிவிக்கையில் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை வீட்டிலேயே தங்கி இருக்குமாறும் வேறு ஒருவரையும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் தனக்கு கூறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் பேசிய காணொளி ஆனது அவரின் வழக்கறிஞர் மூலம் பிபிசி தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அந்த காணொளியில் தெரிவிக்கையில் எந்த வகையிலும் தான் நாட்டின் ஸ்திர தன்மைக்கு எதிராக செயல்படவில்லை என்றும் தான் ஊழலை மட்டுமே எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் ராணுவ தளபதி யூசப்  ஹனிட்டி தெரிவிக்கையில் இளவரசர் ஹம்ஸா அவர்கள் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை மறுத்தார்; அவர் மேலும் தெரிவிக்கையில் இளவரசர் தற்பொழுது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அந்த செயல்பாடுகள் பிறரால் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டார்  என்றும் தெரிவிக்கின்றது.

ஜோ தான் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வுகள் தொடர்பாக நேரடி தகவல்களை அறிந்த இருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவிக்கையில்  பாதுகாப்பு படையினர் இளவரசரின் சிறிய மாளிகைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கின்றன. 2004 ஆம் ஆண்டு தற்போதைய அரசர் அப்துல்லா அவர்கள் முடிக்குரிய இளவரசராக இருந்த ஹம்ஸாவை அந்தப் பதவிக்கு தகுதி உடையவர் அல்ல என்று தகுதி இழப்பை மேற்கொண்டு இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தெரிவிக்கையில் ஜோர்டான் நாட்டு அதிகாரிகள் முன்னாள் முடிக்குரிய இளவரசர் ஹம்ஸா அவர்களையும் ஏறக்குறைய இருபது மற்றைய நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் இதற்கு காரணம் அவர்கள் நாட்டினுடைய ஸ்திரத்தன்மைக்கு பங்கம்  விளைவித்தார்கள் என்று கூறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது

முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பாக தெரிவிக்கையில் இந்த சதிவேலை என்று கூறப்படுவது நம்பத்தகுந்த பரவலாக அடிப்படை உள்ளது  என்றாலும் அது உடனடியாக நிகழக்கூடிய ஒரு செயல்ப்பாடு இல்லை என்றும் உண்மையில் அரசை உடனடியாக கவிழ்க்கும் வேலை அல்ல என்றும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த  நடவடிக்கைகளை தொடங்கியவர்கள் ஆட்சி கவிழ்ப்பு என்பதைவிட தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்ய வைப்பது போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்ததாகவும் இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பலையை உருவாக்குவதற்குமுனைத்ததாகவும் தெரிவிக்கின்றன. ஜோர்டான் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிடப்பட்ட நடவடிக்கையின்வெளிநாடு ஏதேனும்சம்பந்தப்பட்டு  உள்ளதா என்பதை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்

அதேவேளை துணை பிரதமர் அய்மான் சாபாடி தெரிவிக்கையில் அரசர் அப்துல்லாவின் மாற்றான் தாயின் மகனாக முன்னாள் முடிக்குரிய இளவரசர் வெளிநாட்டு சக்திகளோடு உரையாடிய அவர்களுடன் சேர்ந்து நாட்டின் ஸ்திரத்தன்மை குறைப்பதற்கு முயற்சி செய்ய முயட்சி செய்தததாகவும் இதன் காரணமாக அவர் சிறிது காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்

வெளிநாட்டு உளவுத்துறை  ஒன்று இளவரசர் ஹம்சாவின் மனைவியோடு தொடர்பு கொண்டு அவர் மற்றும்  இளவரசர் ஹம்ஸா அவர்கள் விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கின்றது

அதற்கு முன்னதாக ஹம்சா அவர்களின் தாயார் ராணி நூர் அவர்கள்-அதாவது மறைந்த மன்னர் அவர்களின்  மனைவி தனது மகனுக்கு சாதகமாக கருத்து வெளியிட்டுள்ளார்பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தியமும் நீதியும் துணையாக இருக்க நான் இறைவனை வேண்டுகிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருந்தார்; அவர் மேலும் தெரிவிக்கையில் கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும் என்றும் அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

Read next: புதிதாக அதிரவைக்கும் 80,711 கொரோனா தொற்றுக்களை பதிவுசெய்தது பிரான்ஸ்