ஜோ பைடனுக்கு நடந்த விபரீதம்! எழும்பு முறிந்து வைத்தியசாலையில் அனுமதி

5 months

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், தனது நாயுடன் விளையாடும்போது எதிர்பாராத விதமாக வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவருக்கு பல வாரங்களுக்கு நடைப்பயிற்சி அவசியம் என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பைடன் சனிக்கிழமையன்று உபாதைக்குள்ளானதாகவும் பரிசோதனைக்காக டெலாவேரின் நெவார்க்கில் உள்ள எலும்பியல் நிபுணரை சந்தித்ததாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆரம்ப பரிசோதனைகளில் அவரது காலில் வெளிப்படையான எலும்பு முறிவைக் காட்டவில்லை. 

எனினும் வைத்திய ஊழியர்கள் மேலும் விரிவான சிடி ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பைடனின் வலது காலின் நடுவில் இரு சிறிய எலும்புகளில் சிறு முறிவுகள் காணப்பட்டுள்ளதாக அவரது வைத்தியர் கெவின் ஓகானர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அவருக்கு பல வாரங்களுக்கு நடைபயிற்சி தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஓகானர் கூறினார்.

Read next: பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்ட வைரஸ்