விண்ணுக்கு பாய்ந்தது ஜெப் பெஸோஸின் நியூ ஷெப்பர்ட்

Jul 20, 2021 03:05 pm

செல்வந்தர் ஜெப் பெசோஸ் தனது குழுவுடன் பயணிக்கும் நியூ ஷெப்பர்ட் விண்கலம் இன்று செவ்வாய்கிழமை விண்ணுக்கு புறப்பட்டது.

அமேஸன் நிறுவுனர் ஜெப் பெசோசுடன்  சகோதரர் மார்க் பெசோஸ், வோலி பன்க்,82 வயதுடை முன்னணி விண்வெளி வீரர் மற்றும் இளம் வயதான 18 வயது மாணவர்கள் இணைந்துள்ளனர்.

மேற்கு டெக்ஸாஸில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பூமியின் அழகை இரசித்தவாறு செல்லும் வகையில் மிகப்பெரிய யன்னல்கள் இந்த விண்கலத்தில் உள்ளன.

பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை இவர்கள் செல்வார்கள். அதன்பின் சில நிமிடம் விண்வெளியில் மிதந்துவிட்டு பின்னர் பூமிக்கு திரும்பி வருவார்கள்.இதன் மொத்த பயண காலம் 10 நிமிடம் ஆகும்.


Read next: இலங்கை உட்பட 16 நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை! UAE அதிரடி