சீனாவின் அச்சுறுத்தல்-ஜப்பானும் அமெரிக்காவும் பாரிய இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளன.

Oct 26, 2020 03:31 pm

Photo Credit: DOD

பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பானை சூழ வான் கடல் மற்றும் தரை வழி இராணுவ பயிற்சியை ஜப்பானும் அமெரிக்காவும் ஆரம்பித்துள்ளன.

கடந்த மாதம் ஜப்பானின் பிரதமராக யொஷிடா சுகா பதவியேற்றதன் பின்னர் நடைபெறும் பாரியளவான இராணுவ பயிற்சி இதுவாகும்.கிழக்கு சீனக்கடலில் சீனாவின் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமது நாட்டு இராணுவத்தை பலப்படுத்த போவதாக யொஷிடா உறுதியளித்திருந்தார்.

கீன் ஸ்வொரட் எனும் இராணுவ பயிற்சி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும்.இதில் பத்துக்கும் மேற்பட்ட யுத்தக்கப்பல்களும் நூற்றுக்கணக்கான வானூர்திகளும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 46000 துருப்பினர்கள் கடற்படையினரும் இந்த மாபெரும் இராணுவ பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

இம்முறை ஆரம்பமாகியுள்ள இராணுவ பயிற்சி நவம்பர் 5ம் திகதி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சியில் சைபர் மற்றும் மின்னனு பயிற்சிகளும் முதன்முறையாக அளிக்கப்பட உள்ளன.

ஜப்பானை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க மற்றும் ஜப்பான் உறவை மேலும் பலப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக ஜப்பானின் உயர் இராணுவ கட்டளை தளபதி ஜெனரல் கொஜி யமஸக்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ரொனல்ட் ரெகன் விமானத்துடன் ஜப்பானின் மிகப்பெரிய யுத்தக்கப்பல் இணைந்து பயிற்சியில் ஈடுபட உள்ளது.

தென்சீனக்கடல் மற்றும் இந்து சமுத்திரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஜப்பான் கடற்பரப்புக்கு திரும்பும் 248 மீற்றர் நீளமுடைய காகா கப்பல் மறைந்து தாக்குதுல் நடத்தும் எப் - 35 போர்விமானத்தை கொண்டுவருவதற்காக அடுத்த வருடத்திற்கு முன்னர் மீளகட்டமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தென்கிழக்காசிய நாடுகளுடனான நட்பை பலப்படுத்தும் வகையில் சுகா வியட்னாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தாரஇந்தியா அவுஸ்திரேலியா ஜப்பான் மற்றும் அமெரிக்கா உடன்  டோக்கியோவில் இடம்பெற்ற முறைசாரா குழுக்களின் சந்திப்பினைத் தொடர்ந்தே; இந்த விஜயம்  இடம்பெற்றுள்ளது.

 பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அரண் போன்று உயர்வடைவதாக வொஷிங்டன் குறிப்பிடுகின்றது.அத்துடன் இது ஒரு மினி நேட்டோ என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கிழக்கு சீனக்கடலில் சீனாவின் கடல் இராணுவ நடவடிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பில் ஜப்பானின்  கவனம் திரும்பியுள்ளது.

இந்த பகுதியை ஜப்பான் சென்கக்கு மற்றும் டயோயூ என உரிமைக்கொண்டாடுகின்றது.

தன்னாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஹொங்கொங் மீதான புதிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சீனாவின் பல செயற்பாடுகள் தொடர்பில் ஜப்பானும் அமெரிக்காவும் கவலைக்கொள்வதாக ஜெனரல் யமஸக்கி      லெப்டினன் ஜெனரல் கெவின் ஷெனிடர் மற்றும் அமெரிக்க படையின் கட்டளை தளபதி உள்ளிட்டோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பிராந்திய அமைதிக்காகவே இவ்வாறு செயற்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

Read next: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா ஆட்சியைப் பிடிக்கும் புதிய ஜனநாயகக் கட்சியினர்