யாழ்ப்பாணத்தில் இராவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

Jan 09, 2021 04:14 am

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது.

இதனால் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read next: தீவிரவாதிகளுக்கு உதவிய மூன்று இலங்கையர்கள்! அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை