நியூசிலாந்தின் தற்போதைய நிலவரம் என்ன? ஜெசிந்தா ஆர்டனின் புதிய நடவடிக்கை

Sep 07, 2021 10:19 am

நியூசிலாந்தில் செவ்வாய்க்கிழமை 21 புதிய கொரோனா பாதிப்புக்கள் அறிவிக்கப்பட்டன. 

மேலும் நாடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஒரு நாளைக்கு 20 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது.

புதிய பாதிப்புக்கள் அனைத்தும் ஆக்லாந்தில் பதிவாகி உள்ளன. இந்த பகுதி லாக் டவுனில் உள்ளது. 

எனினும் நாட்டின் பிற பகுதிகள் இன்றிரவு பூட்டுதலில் இருந்து வெளியே வரும், 

இருப்பினும் சில பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை மற்றும் முகக்கவசங்களை பயன்படுத்துவதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் தற்போதைய பரவலின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 841 ஆகும்.

பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், ஃபைசர் தடுப்பூசியின் கூடுதல் அளவுகளைப் பெற அரசாங்கம் ஏற்பாடுகளை இறுதி செய்கிறது என்று அறிவித்துள்ளார்.

Read next: சர்ச்சைக்குரிய மியன்மார் மதகுரு விடுதலை