சிக்கலில் சிக்கியுள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்

1 month

 ஐரோப்பிய ஒன்றியம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில்  கோவிட் தடுப்பூசியின் 55 மில்லியன் டோஸை வழங்குமாறு கோரியுள்ளது.

எனினும் இந்த திட்டத்தால் விநியோக சிக்கல்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் எதிர்கொள்கிறது என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜே & ஜே உற்பத்தி நெட்வொர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் குறித்து கேள்விகளை எழுப்பின, 

எனினும்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு டச்சு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read next: இலங்கைக்கு வாள்கள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி தொடர்பாக விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தல்.