இத்தாலி இன்று 24 உயிரிழப்புகளையும் 2437 கோவிட் தொற்றுகளையும் பதிவு செய்தது

Oct 17, 2021 10:20 pm


இத்தாலி மேலும் 24 உயிரிழப்புகளை இன்று ஞாயிறு பதிவு செய்தது. இது நேற்று 14 ஆக இருந்தது. அதேவேளை கோவிட் தொற்றுகள் நேற்று 2983 ஆக இருந்தாலும் இன்று சற்றுக்குறைந்து 2437 ஆக இருந்தது.

 இத்தாலி இதுவரை 131541 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. இது ஐரோப்பாவில் பிரித்தானியாவுக்கு பின்னர் இரண்டாவது அதிக உயிரிழப்புகள் ஆகும்.

 மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2386 ஆக உள்ளது, இது ஞாயிறு 2371 ஆக இருந்தது. இதை தவிர தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 352 இல் இருந்து 349 ஆக குரைந்துள்ளது.

 

Read next: சீனாவிலும் மின்சக்தி நெருக்கடி! உலகளவில் உலோக கைத்தொழில்துறை பெரும் பாதிப்பு