இஸ்ரேலில் புதிய அரசு ஒன்றை அமைக்க நெதன்யாகுவுக்கு சந்தர்ப்பம்

1 week

இஸ்ரேலில் புதிய அரசு ஒன்றை அமைக்கும் வாய்ப்பை பென்ஜமின் நெதன்யாகுவிடம் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இஸ்ரேலின் இடைக்கால பிரதமராகவும் நீண்ட கால தலைவராகவும் இருக்கும் நெதன்யாகு, கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் அதிக எம்.பிக்களின் ஆதரவை பெற்றவராக உள்ளார்.

எனினும் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகு அல்லது எந்த ஒரு எதிர்க்கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற தேர்தல் இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நான்காவது பொதுத் தேர்தலாக இருந்தது.

இந்த நிலையில் நெதன்யாகு புதிய அரசு ஒன்றை அமைக்க தவறும் பட்சத்தில் அந்த வாய்ப்பு மற்றொருவருக்கு வழங்கப்படும்.

நெதன்யாகுவின் தீவிர வலதுசாரிக் கட்சி கடந்த தேர்தலில் அதிகபட்மாக 52 எம்.பிக்களின் ஆதரவை வென்றிருப்பதோடு இது பிரதான எதிர்க்கட்சி தலைவரான யெயிர் லபிட்டின் மைய இடதுசாரி யெஷ் அடிட் கட்சியை விட ஏழு இடங்கள் அதிகமாகும்.

Read next: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.