ஸ்பைவேர் செயலி குறித்த விசாரணைக்கு விசேட குழு நியமனம்.

Jul 21, 2021 03:49 pm

ஸ்பைவேர் குறித்து விசாரணை செய்வதற்கு சிரேஷ்ட அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை இஸ்ரேல் நியமித்துள்ளது.

சர்வதேச மட்டத்தில் தொலைபேசி செயலி மூலமான ஊடுறுவலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்தே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு குழு தலைமையில் செயற்பட உள்ளது.

சுமார் ஐம்பதாயிரம் தொலைபேசி இலக்கங்களை ஊடுறுவியுள்ளதாக ஸ்பைவேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதில் உலகின் பிரமுகர்களின் தொலைபேசி எண்களும் அடங்குகின்றன.

பெகாஸஸின் குறித்த செயலி தொடர்பில் ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

17 ஊடக நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் முன்னணி ஊடக நிறுவனங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த பெகாஸஸ் நிறுவனம் மிகவும் தவறான அனுமானம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

குற்றங்கள் மற்றும் தீவிரவாத்தை ஒழிக்கும் அரசாங்க புலனாய்வு மற்றும் சட்ட அமுலாக்கலுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி தான் இதுவென்றும் தெரிவித்துள்ளது.


Read next: மக்காவில் முதற் தடவையாக பெண் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில்