தளபதி 66 ஷூட்டிங் புகைப்படமா இது...? விளக்கம் கொடுத்த பிரபலம் !

May 13, 2022 06:58 pm

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.

ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பாடல் ஷூட்டிங்குடன் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது.

இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சரத்குமார்,மனோபாலா உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் ஒன்று தளபதி 66 ஷூட்டிங் புகைப்படம் என்று உலவி வந்தது,இது தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.


Read next: புட்டினின் முன்னாள் மனைவி, தற்போதைய காதலிக்கும் தடை