இவரா பிரித்தானியாவின் அடுத்த பிரதமர்?

Oct 20, 2022 10:05 pm

தற்போதைய பிரதமர் லிஸ் டிரஸ் அவர்கள் பதவி விலகுவதாக அறிவித்த பின்னர் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என்ற அறிவிப்பு வந்துள்ள வேளையில், பிரித்தானிய ஊடகங்களில் ரிஷி சுனக் அவர்களின் பெயர் முன்னுரிமையை பெற்றுள்ளது.

லிஸ் டிரஸ் அவர்கள் கன்செர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் அதிக விருப்பு வாக்கை பெற்று இருந்தாலும் ரிஷி சுனக் அவர்கள்  அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கை பெற்று இருந்தார். இவர் கன்செர்வேர்டிவ் கட்சி அறுப்பினர்கள் தேர்வுசெய்யப்ட்ட பொழுது சுமார் 21,000 வாக்குகள் ரிஸ் டிரஸ் அவர்களை விட குறைவாக பெற்று இருந்தார். இது ஒப்பீட்டளவில் பெரிய தோல்வி அல்ல.

போரிஸ் ஜோன்சன் கன்செர்வேட்டிவ் கட்சியின் பலரின் ஆதரவை பெற்று இருந்தாலும் நாடாளுமனற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறுவது கடினம் போலவே தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், இவர் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருக்குதல் காரணமாகவே வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதேவேளை கொன்வேர்வ்டிவ் உறுப்பினர்கள் திறன் குறைந்த ஒரு பிரதமரை பிரித்தானிய மக்கள் அனைவருக்குமாக தேர்வு விடடார்கள் என்று பேச்சும் ஒருபக்கம் சென்று கொண்டு  இருக்கும் பொழுது, கட்சியினர் மீண்டும் பல சர்ச்சையில் மாட்டியுள்ள போரிஸ் ஜோன்சனை தேர்வு செய்வது சந்தேகமாகவே உள்ளது.

இதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் லிஸ் டிரஸ் அவர்கள் அறிவித்த பொருளாதார திட்டமானது முதலீட்டாளர்களை பீதியடைய செய்யும் அதன் காரணமாக பல மோசமான முடிவுகள் ஏற்பாடும் என்று ரிஷி சுனக் அறிவித்து இருந்தார்-அவர் கணித்தது போலவே வட்டி வீதம் அதிகரித்து வீட்டு கடனில் இருந்து ஓய்வூதிய நிதி வரைக்கும் பல பாதிப்புகளை கொண்டு வந்துள்ளது.ரிஷி சுனக்கின் இந்த பொருளாதார ஞானத்தை பிரித்தானியாவின் பெரும்பாலான ஊடங்ககள் சுட்டி காட்டுகின்றன. இருப்பினும் ரிஷி சுனக் இதுவரை தான் போட்டியில் கலந்து கொள்ளப்போவது தொடர்பாக அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் போட்டியிட விரும்பினால் வரும் திங்கள் 2 மணிக்கு முன்னர் தமது விருப்பத்தை பதிவு  செய்ய வேண்டும். 

கன்செர்வேட்டிவ் கட்சி தற்பொழுது 357 ஆசனங்களை வைத்துள்ளதாள் அதிகமாக 3 பேர் மட்டுமே போட்டியில் இந்த முறை முன்னேற முடியும். ஒருவர் மட்டுமே 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதவை பெற்றால் அவர் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு முன்னேறி பிரதமராக வர வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு நடைபெற்றால் திங்கள் அன்றே பிரதமர் யாராக இருக்கும் என்று தெரியவந்துவிடும்.

பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவர் குறைந்தது 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற பின்னரே கட்சி உறுப்பினர்களால் கட்சியின் தேர்வுசெய்ய படுவார்.

இதன் காரணமாக ரிஷி சுனக் அவர்கள் பிரதமராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது-இந்த முறை வெள்ளை இனத்தை சாரதா  ஒருவர் பிரிதமராக வரவில்லை என்றால் எதிர் வரும் பல ஆண்டுகளுக்கு அப்படி ஒருவர் வருவது கடினமே. 


Read next: தீபாவளியன்று பட்டாசு வெடிப்பவர்களுக்கு ஆறு மாதம் சிறை - டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர்