ஒரு வருடத்திற்கு முன்பே தேர்தலை நடத்த முடிவு! ஈராக் பிரதமர் துணிச்சலான முடிவு

1 week

ஈராக் தனது நாடாளுமன்றத் தேர்தலை கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னதாக நடத்துகிறது, அதன்படி ஜூன் 2021 இல் தேர்தல் நடைபெறும் என, பிரதமர் முஸ்தபா அல் காதிமி அறிவித்துள்ளார்.

ஈராக் ஜூன் 6, 2021, அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்று அவர் வெள்ளிக்கிழமை தொலைக்காட்சி உரையில் கூறினார்.

இந்த வாக்கெடுப்புகளின் வெற்றியைப் பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் அனைத்தும் செய்யப்படும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அல்-காதிமியின் அறிவிப்பு அதிக ஸ்திரத்தன்மையையும் ஜனநாயகத்தையும் ஊக்குவிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியது.

ஈராக்கில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்கள் முதலில் மே 2022 இல் நடக்கவிருந்தன. இந்த திகதி தற்போது ஜூன் 6, 2021 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஈராக்கின் பாராளுமன்றம் தேர்தல் தேதியை அங்கீகரிப்பது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read next: “வடகொரியாவை விட்டு யாரும் செல்ல முடியாது” அதிபர் போட்டுள்ள சட்டம்