ஈரானிய அணு விஞ்ஞானி எவ்வாறு கொல்லப்பட்டார்? வெளியானது புதிய திடுக்கிடும் தகவல்கள்

2 months

ஈரானின் முக்கியமான அணு விஞ்ஞானியான மொஹ்சின் பக்ரிஷாதி கடந்த நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டமையின் பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொஷாட் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யூத செய்தித்தாள் ஒன்றில் வெளியான தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இதனை தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விபரங்களை ரொய்ட்டர்ஸ் உறுதிப்படுத்தவில்லை.

இஸ்ரேல் மற்றும் ஈரானின் 20 மேற்பட்டவர்கள் எட்டு மாதங்களுக்கான மேலான காலப்பகுதியில் அணுவிஞ்ஞானியின் முழுமையான  நடமாட்டத்தை அவதானித்ததன் பின்னர் குறித்த தாக்குதலை வெற்றிகரமாக  நடத்தியிருந்ததாக புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.

அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அந்த சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்த இஸ்ரேல் அரசாங்கம் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தாம் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க விரும்பவில்லை என அறிவித்திருந்தது.

59 வயதான அணு விஞ்ஞானி மெஹ்ஷன் பஹ்ரிஷாதி ஈரானின் அணுவாயுதக் கட்டமைப்பின் முக்கியமான அங்கமாக மேற்குலகத்தால் சந்தேகத்துடன் நோக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுவாயுதக் கட்டமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்ததுடன் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

தானியங்கு முறையில் செயற்படக்கூடிய நவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஈரானின் அணுவிஞ்ஞானி மீதான படுகொலை சம்பவம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகில் அணுவாயுதக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாடாக கருதப்படும் ஈரான் எப்போதும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Read next: தொலைபேசியில் பேசிய சீன மற்றும் அமெரிக்க அதிபர்கள்