தனது அணுசக்தி தளங்களை கண்காணிக்க ஐ.நாவுக்கு ஈரான் அனுமதி

Sep 14, 2021 05:09 am

ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவுக்கு தனது அணுசக்தி தளங்களை கெமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. 

கெமராக்களின் மெமரி கார்டுகளை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கெமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக ஈரான் முன்னர் கூறியிருந்தது. 

இதனால், ஈரான் தனது கண்காணிப்புப் பணியைத் தடுப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை புகார் கூறியது. 

அணு ஆயுதங்களை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. 

ஆனால் ஈரான் தொடர்ந்து இதை மறுத்து வருகிறது. தங்களது அணுசக்தித் திட்டம் ஆக்கப்பூர்வமானது என்று அது கூறுகிறது.

நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு உபகரணங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச அணுசக்தி நிறுவன செயலாளர் நாயகம் ரபாயேல் கிரோசி டெஹ்ரான் சென்றுள்ளார். 

அங்கு அவர் ஈரான் அணுசக்தி நிறுவனத்தின் புதிய தலைவர் முஹமது எஸ்லாமியை சந்தித்துப் பேசினார். இதன்போது ஈரான் இந்த அனுமதியை அளித்துள்ளது.

Read next: அவுஸ்திரேலியாவில் நாஜி கொடி மற்றும் வரைபடம் ஒன்றுடன் வசமாக சிக்கிய நபர்! காரணம் என்ன?