இந்தியாவிற்கு உளவுத்துறை எச்சரிக்கை !

Jul 21, 2021 08:07 am

ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை இட்டுள்ளது 

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்கு முன்பதாக தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.  அதேநேரம் சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில் ஆள் இல்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதனையடுத்தே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read next: கொரோனா தொற்றில் உலகம் தோல்வி அடைந்துவிட்டது.