உலகின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் திடீரென முடக்கம்

Sep 22, 2022 08:31 pm

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஏதோ ஒரு சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதில், டுவிட்டர் தவிர்த்து மற்ற 3 சமூக வலைதளங்களுமே மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானவை. 

ஒரே நிறுவனம்தான் 3 சமூக வலைதளங்களையும் நடத்துகிறது என்றாலும் கூட, அந்த மூன்றின் பயன்பாடுகள் மற்றும் நோக்கங்கள் வெவ்வேறானவை ஆகும். உதாரணத்திற்கு வாட்ஸ்அப் என்பது இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் போல பயன்படுகிறது. 

இதில் நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, டாகுமெண்ட் மற்றும் லொகேசன் ஆகியவற்றை அனுப்பிக் கொள்ளலாம். பேஸ்புக் என்பது கருத்துக்கள், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும், விவாத தளமாகவும் இருக்கிறது. 

அதுவே இன்ஸ்டாகிராம் தளத்தை எடுத்துக் கொண்டால் விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்யவும், வீடியோக்களை அப்லோடு செய்யவும் விரும்பும் நபர்களுக்கு அது உதவியாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் மிகுந்த தவிப்புக்குள்ளாகினர். இன்ஸ்டாகிராம் செயலிழப்பு 11:45 மணிக்கு தொடங்கியது என்றும், அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பயனர்களை இதனால் பெரிதும் பாதிப்பு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதே பிரச்சினையில் குழப்பம் மற்றும் விரக்தியுடன், சில பயனாளர்கள் டுவிட்டரில் #InstagramDown என்ற ஹேஷ்டேக்குடன் தங்கள் கோபத்தை பகிர்ந்து வருகின்றனர்.


Read next: பிரித்தானியாவில் மேலும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு