ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

May 14, 2022 12:55 pm

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும்.

மாலை 6.00 மணி முதல் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, பொது இடங்கள், ரயில் நிலையங்கள், பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்த பொது இடத்திலும் அல்லது கடற்கரையிலும் யாரும் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read next: ரஷ்யாவிற்கு உதவுவதை சீனா நிறுத்த வேண்டும் - ஜி7 நாடுகள் வலியுறுத்தல்