கனடாவில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் தொடர்பான விபரம் வெளியானது

Oct 14, 2022 03:04 pm

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மார்க்கம் டெனிசனில் நேற்நு முன்தினம் நடந்த கார் விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்,

நேற்நு முன்தினம்  Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

பாரவூர்தியுடன் மற்றுமொரு வாகனம் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில் இருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், இரண்டு பிள்ளைகள் எனவும் தெரியவருகிறது. 

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் பிள்ளைகளே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Read next: இலங்கையில் கோதுமை மாவின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!