குழந்தைகளின் உடலின் எந்த பகுதிகளில் கொரோனா பரவுகிறது ஆய்வில் வெளியான தகவல்

May 08, 2022 09:17 pm

கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்துள்ள நிலையிலும் முழுவதுமாக நீங்கிவிடவில்லை. கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளிடத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொற்று, உடலில் எந்த இடங்களிலெல்லாம் எப்படி பரவுகிறது என்பதை பற்றிய புதிய கண்டுபிடிப்பை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை டார்கெட் சிகிச்சை என்று சொல்லப்படும், அந்த குறிப்பிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்க முடியும்.அதுமட்டுமின்றி முன்கூட்டியே கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஜர்னலில் வெளியாகியுள்ளது. இது குழந்தைகளில் ஏற்படக்கூடிய கோவிட் தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதை பற்றியும் உடலில் இருக்கும் பல்வேறு பாகங்கள் மற்றும் அமைப்புகளில் எவ்வாறு அழற்சியை ஏற்படுத்தக்கூடிய தன்மையை உருவாக்குகிறது என்பதைப் பற்றியும் விவரித்துள்ளது.

மேலும் உடலில் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல் மற்றும் மூளை ஆகியவற்றில் வீக்கத்தை ஏற்படுத்தி, ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரஸ் எனப்படும் நுரையீரல் நோயை உண்டாக்குகிறது. 

ரத்தம் உறைதலும், உடலிலிருக்கும் புரதச் சத்து கோவிட் வைரசை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதும் தான், ஒரு குழந்தைக்கு கோவிட் எவ்வளவு தீவிரமாக பரவுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி மாணவரான கானர் மெக்.கஃபர்ட்டி, தற்போதுள்ள மைல்டான அறிகுறிகள் வைத்துப் பார்க்கும் போது, குழந்தைகளுக்கு கோவிட் பரவும் ஆபத்து குறைவு. ஆனால், எதனால் அவர்களுக்கு தீவிரமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி சரியான விளக்கங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வில் 20 ஆரோக்கியமான குழந்தைகளுடைய ரத்த சாம்பிள்கள் மற்றும் உடலின் பல உறுப்புகள் அழற்சியால் பாதிக்கப்பட்ட அல்லது அக்யூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்த்ரஸ் என்ற நுரையீரல் நோயால் பாதிக்கபப்ட்ட SARS-CoV-2 தொற்று பாதிப்புள்ள 33 குழந்தைகளின் சாம்பிள்களும் பெறப்பட்டது.

85 மற்றும் 52 புரதங்கள் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் மற்றும் அக்யூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரெஸ் சிண்ட்ரோம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த இரண்டு அறிகுறிகளும் தீவிரமான கோவிட் தொற்று ஏற்படுத்தும் சாத்தியமான விளைவுகளாகும். 

ஆய்வாளர் கூறியுள்ளபடி, கோவிட் 19 ஆல் பாதிப்படைந்த குழந்தைகளில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 1.7 சதவீதம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு தரவு காட்டுகிறது.

மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று பாதிப்படைந்த குழந்தைகளுக்கு, காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, தோல் வெடிப்பு மற்றும் சரும அழற்சி போன்ற நோய்கள் / நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், விரைவான நோய் கண்டறிவது கடினம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் கிரேட்டர் பாரிஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் பேராசிரியர் டேமியன் போனட், இந்த நோய் உடலுக்குள் எப்படி பரவுகிறது என்பது பற்றி அறிய மாதிரிகளைச் சேகரிப்பதும், சிகிச்சை மற்றும் விளைவுகளை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படுவது ஆகியவை தான் முக்கிய பிரச்சினைகளாக இருக்கிறது என்று கூறினார்.

Read next: ஈரானில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுவை குடித்து 10 பேர் உயிரிழப்பு